விஜய் படத்தில் ஜெயம் ரவி என்ன ரோலில் நடிக்கிறார் தெரியுமா?

Sekar Tamil
'தேவி' திரைப்படத்தை அடுத்து இயக்குனர் விஜய், ஜெயம் ரவி நடிக்கும் ஒரு புதுப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சாய்ஷா சைகள் ஹீரோயினாக நடிக்கிறார். இவர் தெலுங்குவில் வெளிவந்த 'அகில்' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதையடுத்து ஜெயம் ரவி இந்த படத்தில் என்ன ரோலில் நடிக்கிறார் தெரியுமா? 'பேராண்மை' திரைப்படத்தில், அவர் நடித்த கதாப்பாத்திரம் போல, இந்த படத்தில் பழங்குடியினர் சம்மந்தப்பட்ட கதாப்பாத்திரத்தில் நடிக்க போகிறாராம். 


இதன் படப்பிடிப்பை அந்தமான் நிகோபார் தீவு மற்றும் தாய்லாந்தில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.  


'பேராண்மை' திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலமான ஜெயம் ரவிக்கு, பெயரிடப்படாத இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles: