அவருக்கு நான்... இவருக்கு என் அண்ணன்... சூப்பரோ... சூப்பர்!

Sekar Tamil
சென்னை:
அவருக்கு என் குரல் பொருத்தமாக இருக்கும்... இவருக்கு என் அண்ணன் படம் கனகச்சிதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். யார்ன்னு சொல்லணுமா... சொல்லிடுவோம்...


தனுஷ் நடிப்பில் தீபாவளி ரிலீசா வர உள்ளது தொடரி. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயின். பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தி உள்ளது.


இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று டைரக்டர் பிரபு சாலமனும் தன் பங்கிற்கு பற்றவைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தனுஷ் பங்கேற்றார்.


அப்போ... அவர் என்ன சொன்னார் தெரியுங்களா? நான் பாடுவதில் எனது குரல் அஜித்திற்கு பொருத்தமாக இருக்கும். என் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நல்ல கதையில் என்னால் நடிக்கமுடியாமல் போனால் நான் விஜய்யை தேர்வு செய்வேன் என்றாரே பார்க்கலாம். செம பேலன்ஸ் செய்கிறார் போங்க...



Find Out More:

Related Articles: