சுகன்யா இடத்தை கைப்பற்றிய விஜி சந்திரசேகர்

Sekar Tamil
'கடல்', 'வை ராஜா வை' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த கவுதம் கார்த்திக் தற்போது 'முத்துராமலிங்கம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜதுரை இயக்குகிறார். இதில் கௌதமிற்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்து வருகிறார். 


இதன் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் கவுதம் கார்த்திக்கிற்கு, அம்மாவாக பிரபல நடிகை சுகன்யா இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அவர் இதுவரை இந்த படத்தில் நடிப்பதற்கு வரவில்லையாம். சொந்த வேலையில் பிஸியாக இருப்பதால் அவர் இந்த படத்தில் நடிக்க தாமதம் செய்தார்.


அதனால் படக்குழுவினர் அவரை நீக்கிவிட்டு, தற்போது விஜி சந்திரசேகரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் 'ஆரோகணம்', 'அம்மணி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் இந்த இடத்தில் அவரது நடிப்பு மிகவும் பிரபலமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles: