செப் 8 வந்துடுறேன்.....சாந்தனுவின் வாய்மை....

Sekar Tamil
நடிகரும், இயக்குனருமான பாக்யராஜின் மகன் சாந்தனு தற்போது 'வாய்மை' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர், டிரைலர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றன. 


இதையடுத்து இந்த படத்தை வரும் செப்டம்பர் 8-ந்தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். வித்தியாசமான கதையை கொண்டு உருவாகியுள்ள இந்த படம் ஷாந்தனுவுக்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


மேலும் இந்த படத்தில் கவுண்டமணி, ராம்கி, ஊர்வசி, முக்தா பானு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 


Find Out More:

Related Articles: