உயரே... உயரே... "றெக்க" கட்டி பறக்குது பருந்து...

Sekar Tamil
சென்னை:
நாளுக்கு நாள் இவரோட மதிப்பு "றெக்க" கட்டிதான் உயரே... உயரே பறக்கிறது. யார் என்று புரியுதுங்களா?


உயர உயர பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகாது என்பார்கள். அதெல்லாம் பழமொழிக்குதான் லாயக்கு. ஊர் குருவியாக இருந்தாலும் உயரே பறந்தால்தான் கோலிவுட்டில் மரியாதை. ஆனால் இங்கு பருந்து ஒன்று பறக்குது... பறக்குது... விட்டால் விண்வெளிக்கே போய்விடும் போல் இருக்குது. அந்த பருந்து விஜய் சேதுபதிதான்.


இவர் நடிப்பில் வந்த தர்மதுரைக்கு ரசிகர்கள் கொடுத்த ரெஸ்பான்ஸ்... வசூலிலேயே தெரிந்துவிட்டது. சூப்பர் டூப்பர் ஹிட் என்று. இப்போது இவரது றெக்க படம் குறைந்தது தென்னிந்தியாவில் மட்டுமே 600 திரையரங்கில் வெளியிட பிளான் செய்து வருகிறார்களாம். இந்த படம் விஜய் சேதுபதி அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல போகிறது என்பது உறுதியோ... உறுதி... இதனால் கோலிவுட் வாசிகள் வாயடைத்து போய் உள்ளனர்.



Find Out More:

Related Articles: