நாங்க மட்டும் என்ன... விஜய் ரசிகர்களும் கொடி பிடிப்பு...

Sekar Tamil
சென்னை:
நாங்களும் சாதனையாளர்கள்தான் என்று அஜித் சாதனையை சுட்டிக்காட்டி தாங்களும் களத்தில் உள்ளோம் என்று குரல் கொடுத்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.


சமூக வலைத்தளங்களில் விஜய்-அஜித் ரசிகர்கள் மாற்றி, மாற்றி ஏதாவது சாதனைகளை ஏற்படுத்துவது சாதாரணம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. டீசர் ஹிட்ஸ், ட்ரைலர் ஹிட்ஸ், லைக்ஸ் என ஒருவர் சாதனையை மற்றொருவர் முறியடிப்பது வழக்கமான ஒன்று.


இந்நிலையில் அஜித் ரசிகர்கள் 2013ம் ஆண்டு பகிர்ந்த ஒரு புகைப்படம் 1 மில்லியன் லைக்சுகளை பெற்று சாதனை படைக்க...


தற்போது விஜய் ரசிகர்களும் விஜய்யின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை குறிப்பிட்டு அதில் 1 மில்லியன் லைக்ஸ் வருவதை குறிப்பிட்டுள்ளனர். இப்படியே மாறி... மாறி... மாறி... சாதனைகள் செய்யுங்கப்பா...


Find Out More:

Related Articles: