சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' திரைப்படம் வரும் அக்டோபர் 7-ந்தேதி வெளிவர உள்ளது. இந்நிலையில் தற்போது இன்னொரு மகிழ்ச்சியான செய்தி வெளிவந்துள்ளது. விஷயம் என்னவென்றால்....
'ரெமோ' திரைப்பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் அடுத்து இயக்கவுள்ள புது திரைப்படத்தை, 'ரெமோ' திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவே தயாரிக்க போகிறாராம்.
நேற்று இரவு ஆர்.டி.ராஜா, 'ரெமோ' திரைப்படம் முழுவதையும் பார்த்துள்ளார். அப்போது அவருக்கு படம் மிகவும் பிடித்து போனதால், பாக்கியராஜ் கண்ணனை பாராட்டி, உனது அடுத்த திரைப்படத்தையும் நானே தயாரிக்கிறேன் என்று வாக்களித்துள்ளாராம்.
மேலும் ஆர்.டி.ராஜா ஏற்கனவே, சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவுள்ள இரண்டு திரைப்படங்களையும், நடிகர் நிவின் பாலி நடிக்கவுள்ள தமிழ் படத்தையும் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.