செங்குட்டுவன் ஜோடியாக தனுஷ் பட நாயகி அம்மு அபிராமி நடிக்கிறார்

SIBY HERALD

ஶ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் சார்பில் சி.மாதையன் தயாரிக்கும் புதிய படம் “பேட்டரி”. 

மணி பாரதி கதை எழுதி இயக்கும் இப்படத்தில் செங்குட்டுவன் நாயகனாக நடிக்க, தனுஷின் “அசுரன்” படப்புகழ் அம்மு அபிராமி நாயகியாக நடிக்கிறார்.

 

இயக்குநர் மணிபாரதி கூறியதாவது...

 

பொதுவாகவே நல்ல கதையம்சம் உள்ள படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் கதையும் பரபரப்பாக அமைந்துள்ளது. உண்மையில் நடந்த சில சம்பவங்களின் அடிப்படையில் இதன் திரைக்கதையை அமைத்து வசனம் எழுதியிருக்கிறார் ரவிவர்மா பச்சையப்பன். இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். அப்படி வறுமை கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு மருத்துவம் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. அப்படிப்பட மருத்துவ துறையிலேயே முறைகேடு நடந்தால் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள். அப்படி மருத்துவ துறையில் நடக்கும் முறைகேட்டால் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப் படுகிறது என்பதை நெஞ்சை பதபதக்கவைக்கும் காட்சிகளாக படமாக்கியுள்ளோம்.

இதை ஒரு க்ரைம் திரில்லர் படமாக நீங்கள் பார்க்கலாம்" என்றார். 

 

இயக்குநர் மணிபாரதி பிரபல இயக்குநர்கள் வஸந்த், மணிரத்னம் , சரண் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இயக்குநர் லிங்குசாமி, ஹரி ஆகியோரின்  கதை விவாதங்களில் பங்காற்றி வருபவர். இப்படத்தில் நாயகனாக நடிக்கும் செங்குட்டுவன்  சப் இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். அவரது கதாப்பாத்திரம் வெகு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். நாயகனுக்கு இணையானதாக நாயகி பாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். சமீபத்தில் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட “அசுரன்” படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்த அம்மு அபிராமி இப்படத்தில் நாயகி பாத்திரம் ஏற்றுள்ளார். மேலும்  “கைதி” படத்தில் மக்களிடம் கைத்தட்டல் பெற்ற ஜார்ஜ் மரியான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ராஜ்குமார், நாகேந்திர பிரசாத், கிருஷ்ணகுமார், அபிஷேக் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் படத்தில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களுக்கு நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறது. பூஜையுடன் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமானது. விழாவில் இயக்குநர் லிங்குசாமி கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். படம் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.

Find Out More:

Related Articles: