செப் 23-ந்தேதி வெளிவரும் வீரசிவாஜி

Sekar Tamil
விக்ரம் பிரபு நடிப்பில் அண்மையில் 'வாகா' திரைப்படம் ரிலீசானது. இதையடுத்து அவர் நடித்த 'வீர சிவாஜி' திரைப்படம் வரும் செப்டம்பர் 23-ந்தேதி வெளிவரவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.


'தகராறு' திரைப்பட இயக்குனர் கணேஷ் விநாயக் இந்த படத்தை இயக்கினார். இதில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக ஷாமிலி நடித்துள்ளார். இசைப்பணிகளை டி.இமான் மேற்கொண்டுள்ளார். 


வித்தியாசமான கதையை கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரம் பிரபு கால்டேக்சி டிரைவராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த 'வாகா' திரைப்படம் சரியாக வரவேற்பு பெறாததால், இந்த படம் நல்ல வரவேற்பு பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles: