வேலையில்லா பட்டதாரி ரீமேக்கில் நடிக்கும் அமலா பால்

Sekar Tamil
கடந்த ஆண்டு தனுஷ் - அமலா பால் நடிப்பில் வெளிவந்த 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது இதை கன்னடத்தில் ரீமேக் செய்கின்றனர். 


பிரபல ராக்லைன் ப்ரொடக்ஷன்ஸ் இப்படத்தின் ரீமேக் உரிமைகளை பெற்றுள்ளது. நந்த கிஷோர் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் கதாப்பாத்திரத்தில் மனுரஞ்சன் நடிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.


இந்நிலையில் இதில் கதாநாயகியாக அமலா பால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தைகளை தற்போது படக்குழுவினர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


Find Out More:

Related Articles: