அடுத்த கட்டத்திற்கு சென்ற 'கடவுள் இருக்கான் குமாரு'

Sekar Tamil
ஜிவி பிரகாஷ் நடிப்பில் தற்போது 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படம் உருவாகியுள்ளது. ராஜேஷ் இயக்கத்தில், டி.சிவா தயாரிப்பில் உருவான இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் அண்மையில் நிறைவடைந்தன.


இதையடுத்து இந்த படத்தின் டப்பிங் பணிகள் நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த டப்பிங் பணிகள் இன்னும் 1 வாரம் வரை நடைபெறும் என கூறப்படுகிறது. 


'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி, ஆனந்தி உள்ளிட்ட இருவரும் நடித்துள்ளனர். மேலும் இதில் பிரகாஷ் ராஜ், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் நடித்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 


வழக்கமாக ராஜேஷ், தான் இயக்கும் திரைப்படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல இந்த படத்திற்கும் கொடுத்திருக்கிறார்.


Find Out More:

Related Articles: