சென்னை:
கிழித்து தோரணம் கட்டி தொங்க விடாத குறைதான். டென்ஷனில் பொரிந்து தள்ளிவிட்டார் இவர்.
யார் என்று தெரியுங்களா? நாட்டாமையின் வாரிசு நடிகைதான். அட வரலட்சுமிதாங்க அவர். தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு இவருக்கு செம பேரு.
இவர் விஷாலை விரைவில் திருமணம் செய்துக்கொள்ள போவதாக ஒரு செய்தி உலா வந்து உரக்க கத்த இதை வரலட்சுமி மறுத்துள்ளார். அதுமட்டுமா? ‘ பத்திரிகை நண்பர்களே... உங்களுக்கு சொல்லாமல் திருமணம் செய்ய மாட்டேன், உங்க வேலையை முதலில் பாருங்கள்’ என டுவிட் போட்டு தன் கடுப்பை காட்டியுள்ளார்.
அப்போது நெருப்பு இருக்கு... அதான் புகையுது என்கின்றனர் கோலிவுட் வாசிகள்...