ரஜினியை அடுத்து விக்ரம் உடன் இணைந்த ரித்விகா

Sekar Tamil
'மெட்ராஸ்' திரைப்படத்தில் அன்புவிற்கு மனைவியாக நடித்த ரித்விகா, இதையடுத்து ரஜினியின் 'கபாலி' திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்தார். இந்த படத்தில் நடித்ததற்கு பிறகு அவரது மார்க்கட் அந்தஸ்து மேலும் உயர்ந்துள்ளது.


இந்நிலையில் அவர் விக்ரம் உடன் ஒரு புது படத்தில் நடித்திருக்கிறாராம். அது என்ன படம் தெரியுமா... நம்ம 'இருமுகன்' தான். விக்ரம்,நயன்தாரா, நித்யா மேனன் மூவரும் நடித்துள்ள இருமுகன் திரைப்படத்தில் ரித்விகா முக்கியமான ஒரு ரோலில் நடித்திருக்கிறாராம். 


இந்த படம் வரும் செப்டம்பர் 2-ந்தேதி திரையரங்கிற்கு வருகிறது. மேலும் அவர் கவுண்டமணியின் 'எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வருகிறாராம். 


Find Out More:

Related Articles: