சிம்புக்கு 2 சிம்புங்க... அதில் எந்த சிம்பு செய்யறார் வம்பு...

Sekar Tamil
சென்னை:
சிம்புங்க... அந்த சிம்புக்கு 2 சிம்புங்க... அந்த 2 சிம்புவில் எந்த சிம்பு செய்யறார் வம்புங்க... அதுதான் சஸ்பென்ஸ்ங்க... என்ன ஒன்றும் புரியலையா.


நேரடியாக விஷயத்திற்கு வர்றோம். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க சிம்பு தற்போது நடித்து வரும் படத்தில் 3 கெட்டப்புகள் என்பது தெரிந்த விஷயம். இந்த படம் பிரமாண்டமாக தயாராகி வருது. இப்ப இந்த படம் பற்றி ஒரு விஷயம் லீக் ஆகியிருக்குங்க... என்ன தெரியுங்களா?


சிம்பு, ஸ்ரேயாவிற்கு இரட்டை குழந்தைகள் பிறக்க, அவங்க இரண்டு பேருமே சிம்பு தானாம். (அப்படி போடு அருவாளை) இதில் அப்பாவின் முரட்டுக்குணம் ஒரு சிம்புவுக்கும், மற்றொரு சிம்புவோ சாந்த சொரூபியாம்.


இதில் யார் வில்லன் என்பது தான் சஸ்பென்ஸ்சாம். அதாவது முரட்டு சிம்பு வில்லனா... அமைதியான சிம்பு வில்லனா? என்று கதைபற்றி வந்த வதந்தியை வதந்தி வசந்தா சொல்றாங்க... சொல்றாங்க... இந்த படம் சிம்புவுக்கு மாஸ் ஹிட் கொடுக்கும்ன்னு சொல்றாங்க... வேண்டாம்பா... ஓவர் பில்டப்பு...



Find Out More:

Related Articles: