கோட்சூட், கடிகாரம்... கபாலியோடது... ஆன்லைனில் விற்பனை...

Sekar Tamil
சென்னை:
பட விற்பனை கல்லாவை ரொப்பியது என்றால் அடுத்த விற்பனைக்கு தயாராகி வருகிறாராம் கபாலி. எதற்கு தெரியுங்களா?


ரஜினியின் கபாலி படம் விண்ணை முட்டும் அளவிற்கு வசூல் சாதனை செய்து வருகிறது. புரொமோஷன் வருமானம் மட்டுமே ரூ. 100 கோடியை தொட்டுவிட்டது என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.


இந்நிலையில் படத்தில் ரஜினி பயன்படுத்திய கோட் சூட், வாட்ச் போன்ற பொருட்கள் அனைத்தும் ஏலத்துக்கு விடப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த பொருட்கள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டவை. 


இவற்றை ஆன்லைன் மூலமாகவே ஏலம் விடப்போகிறார்களாம். அப்ப இன்னும் கல்லா ரொம்பும். ரொம்பி வழியும்...



Find Out More:

Related Articles: