பாடல் எழுதிய கவிஞரை "ஆனந்த கண்ணீர்" விட செய்த தாணு

Sekar Tamil
சென்னை:
"வீரத்துறந்தரா" இது... கபாலி படத்தில் செம ஹிட் அடித்த பாடல் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த பாடல் எழுதிய கவிஞருக்கு ஏற்பட்ட ஒரு அதிர்ச்சியை பற்றி பார்ப்போமா?


அட அதிர்ச்சின்னா... அது இன்ப அதிர்ச்சிங்க... சூப்பர் ஸ்டாரின் கபாலி படம் வசூல் ரீதியாக உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது தெரிந்த விஷயம். படத்தில் பணியாற்றிய அனைவரையும் தயாரிப்பாளர் தாணு புகழ்ந்து வருகிறார்.


இப்படத்தில் பணியாற்றிய கவிஞர் உமா தேவி ‘வீரத்துறந்தரா’ பாடலை எழுதியவர். இவர் இப்பாடலுக்கான சம்பளத்தை வாங்க தாணு அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அங்குதான் அவருக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர் தாணு உங்களூடைய சம்பளம் என்ன என்று கேட்க, 15 ஆயிரம் ரூபாய் என்று உமா தேவி சொல்லியிருக்கிறார்.


அப்போது தயாரிப்பாளர் தாணு செய்த செயல்தான் அவருக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. செக் எடுத்து 2 லட்சம் எழுதி கொடுத்துள்ளார் தாணு. இதனால் உமா தேவி ஆனந்த கண்ணீரில் மிதந்து தாணுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். வெற்றியின் வசூலில் அனைவருக்கும் அள்ளிக் கொடுத்துள்ளார் தாணு.


Find Out More:

Related Articles: