முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த விஜய் சேதுபதி

Sekar Tamil
'இறைவி' திரைப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து 'தர்மதுரை' திரைப்படம் வெளிவரவுள்ளது. இந்த படத்தை அடுத்து அவர் கே.வி.ஆனந்த் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வந்தார். 


கடந்த 25 நாட்களாக நடைபெற்று வந்த இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. பெயரிடப்படாத இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோன்னா செபாஸ்டியன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே 'காதலும் கடந்து போகும்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்த படத்தில் நடிகர் தி.ராஜேந்தர் முக்கிய ரோலில் நடிக்கிறார்.  ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. 


முதற்கட்ட படப்பிடிப்பை அடுத்து விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


Find Out More:

Related Articles: