சாமி அவதாரம் எடுக்கும் விக்ரம்

Sekar Tamil
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'இருமுகன்' திரைப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் ஆனந்த் ஷங்கர், தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் உள்பட படக்குழுவினர் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன், நிவின் பாலி, இயக்குனர் ஹரி உள்பட பலர் கலந்து கொண்டனர். 


விழாவில் கலந்து கொண்ட அனைவரும் மேடையில் பேசும் போது, இயக்குனர் ஹரியும் மேடையில் பேசினார். அப்போது ஒரு சந்தோஷமான விஷயத்தை அவர் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். அது என்னவென்றால், 




2003-ம் ஆண்டு விக்ரம் நடிப்பில், அவருடைய இயக்கத்தில் வெளிவந்த 'சாமி' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்க போகிறாராம். இதில் ஹீரோ வேறு யாரும் இல்லை... நமது சீயான் தான். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் பிரியன் என மகிழ்ச்சியாக கூறினார். 


மேலும் இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என தெரிகிறது.



Find Out More:

Related Articles: