ஆண்ட்டி ஐஸ்வர்யாவுடன் சண்டையை முறித்த சோனம்

SIBY HERALD
நடிகர் அணில் கபூரின் மகள் சோனம் கபூர், நாளை தனது நீண்ட நாள் காதலர் ஆனந்த் அஹுஜாவை மணமுடிக்கிறார். ராஞ்சனா, நீர்ஜா, பேட்மென், டில்லி சிக்ஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ள சோனம் கபூரின் மெஹந்தி விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல பிரபலங்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க பட்டாலும் ஒரு விருந்தினரின் வருகை தான் பெரிய அளவில் எதிர் பார்க்கப்படுகிறது. 



அது வேறு யாருமில்லை, முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தான். சில ஆண்டுகளாகவே ஐஸ்வர்யா ராய்க்கும் சோனம் கபூருக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இதற்கு காரணம் சில ஆண்டுகள் முன்பு கேன்ஸ் திரைப்பட விழாவில், சோனம் ஐஸ்வர்யா ராயை பார்த்து ஆண்ட்டி என்று அழைத்து தான். 



ஆனால்  வேறுபாடுகளையும் மீறி, சோனம் கபூர் ஐஸ்வர்யாவை தனது திருமணத்திற்கு போன் செய்து அழைத்தாராம். நீண்ட நேரமாக இருவரும் சிரித்து பேசி மகிழ்ந்ததில், அவர்கள் இடையே உள்ள மனக்கசப்பு தீர்ந்து நாளை ஐஸ்வர்யா சோனமின் திருமணத்துக்கு செல்வார் என்று கூறப்படுகிறது. 


Find Out More:

Related Articles: