ஒற்றை பாட்டுக்கு குத்தாட்டமா? என்னம்மா இப்படி பண்ணுறீங்க

Sekar Tamil
சென்னை:
தல படத்தில் நடிக்க போகும் நேரத்தில் தெலுங்கு படம் ஒன்றில் குத்தாட்டம் போட உள்ளார் காஜல் அகர்வால் என்ற தகவலால் படக்குழு யோசனையில் மூழ்கி உள்ளதாம்.


"தல" நடிக்க சிவா இயக்கும் படத்தில் காஜல்தான் ஹீரோயின். இதில் குடும்பத்தலைவி வேடம் இவருக்கு என்று ரகசியம தெரிந்து குருவி என்று சத்தம் போட்டு சொல்லி சென்றது. இந்நிலையில் தெலுங்கு படம் ஒன்றில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட இருக்கிறாராம் காஜல் அகர்வால்.


ஜீனியர் என்.டி.ஆருடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு ஆடுகிறாராம். இந்த படத்தில் சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் ஹீரோயின்கள். இந்த ஒரு பாடலுக்கு மட்டும் இவருக்கு 50 லட்சம் சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல்கள் கோலிவுட்டை கலக்க... தல படத்தின் படக்குழுவினர் சற்றே அப்செட் ஆகியுள்ளனராம். தல படத்தில் வெயிட்டான குடும்ப ரோல் செய்ய உள்ள நிலையில் இப்படி குத்தாட்டம் போடலாமா? என்று நொந்து போய் உள்ளனராம். காசு... பணம்... துட்டு... மச்சி....



Find Out More:

Related Articles: