பிடிச்சு போனால் இப்படிதான்... அவரை புக் செய்யுங்க...

Sekar Tamil
சென்னை:
இவர் இப்படிதாங்க பிடிச்சு போய்விட்டால் அவ்வளவுதான்... இது இளைய தளபதி பற்றி கோலிவுட்டில் உள்ள அனைவரும் அறிந்த ஒன்று.


இதற்கு உதாரணம் விஜய்யின் படங்கள்தான். இவரது பல படங்களில் அவரை சுற்றி ஒரு நண்பர்கள் கூட்டம் இருந்துக்கொண்டே இருக்கும்.
அவர்கள் அனைவருமே விஜய்யின் ரியல் லைப் நண்பர்கள்தான்.


விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் "மொட்டை" ராஜேந்திரன் வேண்டும் என்று விஜய்யே விருப்பம் தெரிவித்துள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 


தெறி படத்தில் இருவரும் சேர்ந்து நடித்ததில் இருந்தே மொட்டை ராஜேந்திரனை ரொம்ப பிடித்து விட்டதாம் விஜய்க்கு. அதனால்தான் இந்த படத்திலும் அவரை புக் செய்ய சொல்லியிருக்கிறார். மொட்டை ராஜேந்திரனுக்கு இப்போ அடைமழைதான் போங்க...



Find Out More:

Related Articles: