எதிர்பார்த்தது நடந்ததால் "மகிழ்ச்சி"... ரசிகர்கள் உற்சாகம்

frame எதிர்பார்த்தது நடந்ததால் "மகிழ்ச்சி"... ரசிகர்கள் உற்சாகம்

Sekar Tamil
சென்னை:
ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்த அந்த விஷயம் நடந்துவிட்டது. நடந்தே விட்டது. இதனால் இப்போ அவர்கள் செம "மகிழ்ச்சி".


என்ன விஷயம் தெரியுங்களா? தெறி படம் இந்த வருடம் மாபெரும் வசூல் சாதனை செய்தது. சென்னையில் உள்ள பிரபல மாலில் தெறி 13 நாளில் ரூ 1.12 கோடி வசூல் செய்ததுதான் சாதனையாக இருந்தது.


இந்நேரத்தில்தான் கபாலி பல உலக சாதனைகளை நொறுக்கி கடலை உருண்டைபோல் வாயில் போட்டு மென்றது. பல சாதனைகளை புதிதாக ஏற்படுத்தி உள்ளது. ஆனால் ரசிகர்கள் சென்னை மாலில் தெறி சாதனை ஏற்படுத்தியதை கபாலி உடைத்து நொறுக்குவாரா என்றுதான் வெகுவாக எதிர்பார்த்திருந்தனர். தற்போது அவர்களின் எண்ணம் ஈடேறிவிட்டது.


6 நாட்களிலேயே ரூ.78 லட்சம் வரை கபாலி அங்கு வசூல் செய்திருந்தது. இப்போது கபாலி 10 நாட்களில் ரூ 1.12 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து, தெறி சாதனையை முறியடித்துவிட்டதாம். இதனால் ரஜினி ரசிகர்கள் தற்போது செம மகிழ்ச்சி பாஸ்.



Find Out More:

Related Articles:

Unable to Load More