3 மொழியும் என் இலக்குதான்... டப் கொடுக்கும் விஜய் ஆண்டனி

Sekar Tamil
சென்னை:
செம டப் பைட் கொடுக்க வந்துட்டார் இவர். இனி இவருக்கும்... அவருக்கும்தான் சரியான போட்டி என்கின்றனர் கோடம்பாக்கம் கோவிந்தசாமிகள். என்ன விஷயம்ன்னா?


கோலிவுட் இண்டஸ்ட்ரியில் சிவகார்த்திகேயனுக்கு டப் பைட் கொடுக்க ஆரம்பிச்சுட்டாராம் விஜய் ஆண்டனி தான். மினிமம் கேரண்டி என்று தன் போக்கில் போய் கொண்டிருந்த இவரை ஜிவ்வென்று உயர்த்தி மார்க்கெட்டை கொடியை உயரே பறக்கவிட்டுச்சு பிச்சைக்காரன் படம். இங்கு மட்டுமின்றி தெலுங்கிலும் ப்ளாக்பஸ்டர் ஆக ஓடி கல்லாவை ரொப்பியது.


இப்ப கன்னடத்திலும் நல்ல கலெக்சனாம். அதனால் தற்போது தன் அடுத்த படமான சைத்தானை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் ரிலீஸ் பண்ணலாம் என்று இருக்கிறாராம். இனி வரப்போற அனைத்து படங்களுக்கும் இதுதான் நிலையாம். சிவகார்த்தியும் தன் படத்தை தெலுங்கிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கும் நிலையில் போட்டிக்கு வந்துட்டாராம் விஜய் ஆண்டனி. யார் படம் நல்லா இருக்கோ... அதைதான் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ஜமாய்ங்க...


Find Out More:

Related Articles: