சிம்புவின் படத்தில் எம்.ஜி.ஆர். நடிகர்

Sekar Tamil
'இது நம்ம ஆளு' திரைப்படத்திற்கு பிறகு சிம்புவின் நடிப்பில் 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் வெளிவரவுள்ளது. 


இந்த படத்தை அடுத்து சிம்பு தற்போது 'த்ரிஷா இல்லேனா நயன்தாரா' திரைப்பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். 


இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகின்றது. இந்த படத்தில் சிம்பு மூன்று வித்தியாசமான கெட்டப்களில் நடிக்கிறார். இதில் ஒரு கதாநாயகியாக ஷரியா நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் விடிவி கணேஷ், மஹத் ஆகியோரும் நடிக்கின்றனர். 


இந்நிலையில் தற்போது இந்த படத்தில் பழம்பெரும் நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை... நமது ராகுல் தாத்தா தான்... இவர் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ராகுல் தாத்தா 


மேலும் இவர் விஜய்யுடன் 'கத்தி' திரைப்படத்திலும், அஜித்துடன் 'வீரம்' மற்றும் விஜய் சேதுபதியின் 'நானும் ரவுடி தான்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். குளோபல் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.



Find Out More:

Related Articles: