கார்த்தியின் விமான படைத்தலைவர் யார் தெரியுமா?

Sekar Tamil
'காஷ்மோரா' படப்பிடிப்பு முடிந்த பிறகு கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கும் 'காற்று வெளியிடை' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் பைலட்டாக நடிக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹீரோயினாக நடிக்கிறார்.


இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி, தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த படத்தில் கார்த்தியின் விமான படை தலைவர் யார் தெரியுமா...


வேறு யாருமில்லை நமது டெல்லி கணேஷ் அவர்கள் தான்... இவர் இந்த படத்தில் விமான படைத் தலைவராக நடிக்கவுள்ளதார் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி காமெடி கேரக்டரில் நடிக்கிறார். மணிரத்னம் இயக்கி, தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.


மேலும் இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles: