மும்பை;
ரூ.550 கோடி ரூபாயாம்... அம்புட்டு கல்லா கட்டி லாக்கரை ரொப்பியுள்ளது சுல்தான் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
உலக அளவில் 550 கோடி ரூபாயை வசூலித்து சல்மான் கானின் ’சுல்தான்’ அபார சாதனை படைத்துள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கான் - அனுஷ்கா ஷர்மா ஜோடியாக நடித்த ‘சுல்தான்’ திரைப்படம் கடந்த 6-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
முதல்நாளிலேயே 36.54 கோடி ரூபாயை அள்ளிய இந்த படம் 3 நாட்களில் நாடு முழுவதும் 106 கோடி ரூபாயை வாரி எடுத்தது. இதற்கு முன்பு வந்த படங்களின் வசூல் சாதனையை முறியடித்து புதிய சாதனையை செய்தது.
இந்நிலையில் உலகஅளவில் இதுவரை மொத்தம் 550.9 கோடி ரூபாய் வசூலித்து உலகளாவிய வசூலில் 3வது இந்தியப் படமாக சுல்தான் இடம்பிடித்துள்ளதாக யாஷ்ராஜ் பிலிம்ஸ் நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.