சென்னை:
என்னை கொடுமைப்படுத்திய 3 டைரக்டர்களில் நீங்களும் ஒருவர் என்று செல்ல கோபம் காட்டினாராம் சூப்பர் ஸ்டார். என்ன விஷயம்? என்று ஆர்வமா இருக்கீங்களா?
இதே சொல்லிடுவோம். சூப்பர் ஸ்டார் ரஜினி கால்ஷீட் கிடைப்பது குதிரைக் கொம்பு கிடைத்து விட்டால் அந்த டைரக்டருக்கு ஏறுமுகம்தான். அப்படி ஒரு வாய்ப்பு 3வது படத்திலேயே ரஞ்சித்திற்கு வந்து சேர்ந்தது.
படம் முடிந்து டப்பிங் போது நடந்த சில விஷயங்களை ரஞ்சித் பகிர்ந்து கொண்டுள்ளார். என்ன சொல்லியிருக்கார்ன்னா. ரஜினி சார் எப்போதும் டப்பிங் பேசும் போது எந்த இயக்குனரையும் உள்ளே அனுமதிக்கமாட்டாராம்.
மணிரத்னம் மட்டுமே சண்டைப்போட்டு உள்ளே இருந்துள்ளார், அதன் பின் ரஞ்சித் மட்டுமே டப்பிங் ஸ்டுடியோவில் இருந்துள்ளார். முதல் நாள் பேசியதை மறுநாள் பேசமாட்டேன் என்று சூப்பர் ஸ்டார் சொல்லியிருந்தாலும், டப்பிங் எல்லாம் முடிந்து ஒருநாள் சார் மீண்டும் அந்த வசனத்தை பேசுங்கள் என்று ரஞ்சித் கூற, ரஜினி வழக்கம் போல் தன் பாணியில் சிரித்துக்கொண்டே, “சார் நீங்க பெரிய ஆளு தான்” என்றவர் சட்டென்று என்னை கொடுமைப்படுத்திய 3 இயக்குனர்களில் நீங்களும் ஒருவர் என்று செல்லமாக கூறினாராம்.
இதனால் ரஞ்சித் இப்போ செம ஹேப்பியாம். பின்னே யாருக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும். உலகளாவிய பெருமை அல்லவா கிடைச்சிருக்கு. ரஜினி சொல்வதை வைத்து பார்த்தால் ஒருவர் ரஞ்சித் மற்றொருவர் மணிரத்னம் மூன்றாவது யார். அது சூப்பர் ஸ்டாருக்கே வெளிச்சம்.