பாகுபலி சேட்டிலைட் ரைட்ஸ் இப்பவே வித்திடுச்சு... ரூ.55 கோடிக்கு...

Sekar Chandra
சென்னை:
ஒரு பக்கம் கபாலி... விரட்டி விரட்டி சாதனைகளை முறியடிக்குதுன்னா... மற்றொரு பக்கம் பாகுபலி-2 தன் பங்கிற்கு சாதனைகளை குவிக்குது. இது தென்னிந்திய சினிமாக்களுக்கு உயர்ந்த நேரம் போலிருக்கு.


பாகுபலி இந்திய சினிமாவே வியந்துப்பார்க்கும் அளவிற்கு வசூல் சாதனை செய்தது அனைவருக்கும் தெரியும். இந்த படத்தின் வசூல் தெறிக்க விட்டதில் ஹாலிவுட் ஜாம்பவான்களே வாயடைத்து போய் நின்றனர். இப்படி சாதனைகளை நிகழ்த்திய பாகுபலி வந்து ஒரு வருடம் முடிந்து விட்டது. 


தற்போது இதன் அடுத்த பாகம் பாகுபலி-2 ரெடியாகிக்கிட்டு இருக்கு. இப்பவே இந்த படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் ரூ.55 கோடிக்கு விற்பனை ஆகிடுச்சாம். இதை கேள்விப்பட்டு பாலிவுட்டே "பாஸ்"  அசந்து போய் நிற்கிறார்களாம். அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் இந்த படம் திரைக்கு வரவுள்ளது,


Find Out More:

Related Articles: