தமிழ் சினிமாவில், ஒரே நேரத்தில் அறிமுகமான இரு நடிகைகள் தற்போது முன்னணி நடிகைகளாக வலம் வருகின்றனர். ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இருவருக்கும் இடையே ஏராளமான போட்டி, பொறாமைகள் உண்டு.
இந்நிலையில் ஒரே சமயத்தில் இவர்கள் இருவரும் தனித்தனியாக பேய் படம் ஒன்றில் நடித்து வருகின்றனர். ஹீரோ இல்லாமல் தனித்து நடிக்கும் இவர்களது இரு படங்களில் எந்த திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டை பெரும் என கோடம்பாக்கமே தற்போது எதிர்ப்பார்த்து இருக்கிறது.
இந்நிலையில் இருநடிகைகளும் ஒருவருக்கொருவர் சவால் விட்டு, படத்தில் தங்கள் நடிப்பை முழுமையாக காண்பித்து நடிப்பதாக தற்போது தகவல்கள் வந்துள்ளன.
போட்டிகள் இருக்கலாம் ஆனால் பொறாமை இருக்கக் கூடாது. இதை இவர்கள் பின்பற்றலாம்.