தல 57 படப்பிடிப்பு எங்கு? எப்போது?

Sekar Chandra
'வேதாளம்' திரைப்படத்திற்கு பிறகு அஜித் நடிக்கவுள்ள 'தல 57' படத்தின் தொடக்க பூஜை விழா கடந்த வாரம் நடைபெற்றதை நாம் பார்த்தோம். இதையடுத்து இதன் படப்பிடிப்பு தொடங்கும் தேதி மற்றும் இடம் குறித்த சில முக்கியத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. 


அஜித் குமார் எப்பிஐ ஏஜெண்டாக நடிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 12-ந்தேதி, பல்கேரியாவில் தொடங்குகிறது. இதில் அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொள்ளவுள்ளனர். 


மேலும் நீண்ட பரிசீலனைக்கு பிறகு, இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  தம்பி ராமைய்யா மற்றும் கருணாகரன் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். 


சிறுத்தை சிவா இயக்கவுள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.



Find Out More:

Related Articles: