டாபிக்கை விட்டு நடிகரை விளாசிய "பஞ்சாயத்து" இருக்கு உள்குத்து

Sekar Chandra
சென்னை:
கோயிலுக்கு போன யாராவது சாமி இல்லைன்னு சொன்ன என்ன நினைப்பீங்க. டென்ஷன் ஆகும்ல. அதுபோல்தான் நடந்திருக்கு. யார் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்.


என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மான்னு கேட்டு அந்த வார்த்தையாலேயே பிரபலமும், ஆகி அதனாலேயே டென்ஷனும் ஆனவர் அந்த சின்னத்திரையில் பஞ்சாயத்து பேசிய நடிகை. 


சில நாட்களுக்கு முன்னாடி டிவி சேனல் ஒன்றில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த பெண் படுகொலை விவாத நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டவர் டாபிக்கை விட்டுவிட்டு ஒரு நடிகரை வாங்கு வாங்கு என்று வாங்கி எடுத்தார். டாபிக் எதை பற்றி இவர் எதை பற்றி பேசுகிறார் என்று சேனல்காரர்களுக்கும் குழப்பம். இடைமறித்தால் அதுவே பெரிய பிரச்னை ஆகும்னு விட்டுட்டாங்க. 


இவர் இப்படி டிராக் மாறி பேசி...இல்ல திட்டியது விஜய் சேதுபதியை. இதுக்கு என்ன காரணம்னா... இந்த நடிகை சில படத்தையும் இயக்கி இருக்காங்க. இப்ப அடுத்த படத்துக்காக இவருக்கிட்ட டேட் கேட்டு இருக்காங்க. ஆனா அவரை சந்திக்க கூட முடியலையாம்.


இதுக்கு முன்னாடி இந்தம்மா இயக்கிய படம் போணி ஆகாமல் பெட்டிக்குள் தூங்கிக்கிட்டு இருக்க... அவரு எப்படி கால்ஷீட் கொடுப்பாரு. அந்த கடுப்பிலதான் நேரடி ஒளிபரப்பு என்பதையும் மறந்து இப்படி விளாசி இருக்கு. இதுனால விஜய் சேதுபதியோட ரசிகர்கள் செம டென்ஷனில் இருக்காங்களாம்.


Find Out More:

Related Articles: