சென்னை:
இல்லங்க... இல்ல... என்று மறுப்பு தெரிவித்துள்ளது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். ஏன்? தெரியுங்களா?
கார்த்தியை வைச்சு கொம்பனை உருவாக்கும்போதே இன்னொரு படத்தையும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு செய்து தர்றதா ஒத்துக்கிட்டு இருந்தாராம் முத்தையா. கொம்பனுக்கு பிறகு மருது படமும் முடிஞ்சு அதுவும் முத்தையாவுக்கு நல்ல பேரை சம்பாதிச்சு கொடுத்து இருக்கு.
இந்நிலையில் ஒத்துக்கிட்டது மாதிரி அடுத்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்காக எடுக்க போறாராம். இதுல சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் பரபரக்க... இல்லங்க... இல்ல... இப்பதான் திரைக்கதையே ரெடியாகிக்கிட்டு இருக்கு... அது முடிஞ்சாதான் யாரு நடிக்கிறாங்கன்னு முடிவு செய்ய முடியும்னு சொல்லியிருக்கு ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.
நெருப்பில்லாம புகையுங்களா? சூர்யாவுக்கு இப்ப தேவை ஒரு மாஸ் ஹிட் படம். முத்தையாவும் ஹிட்டாக கொடுப்பதால் சூர்யாதான் இந்த படத்தில் நடிப்பார் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். அட விடுங்கப்பா... கத்திரிக்காய் முற்றினால் கடைக்கு வந்துதானே ஆகணும்...