விஜய் ஆண்டனியின் எமன் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

Sekar Chandra
'பிச்சைக்காரன்' திரைப்படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி, 'சைத்தான்' திரைப்படத்தில் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்து 'எமன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜீவா ஷங்கர் இயக்குகிறார். இவர் 'நான்' திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதனைத் தொடர்ந்து, எமன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடிக்கிறார். வில்லனாக பிரபல நடிகர் தியாகராஜன் நடிக்கிறார். இந்த படத்தின் பாடல் காட்சி மற்றும் முக்கிய படப்பிடிப்பிற்காக  படக்குழுவினர் மும்பை சென்றுள்ளனர். 


அங்கு, இன்று படக்குழுவினர் பாடல்காட்சிகளை படமாக்கி வருகின்றனர். இந்த படப்பிடிப்பு  இன்னும் 2 வாரம் தொடர்வதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் பேனர் சார்பில் ஏ.சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இயக்குனர் ஜீவா ஷங்கரே இந்த படத்திற்கு ஒளிப்பதிவாற்றும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.



Find Out More:

Related Articles: