"அகிரா" செப்.2-ல் ரிலீஸ்... ஆக்சனில் அதகளம் செய்துள்ள சோனாக்சி

Sekar Chandra
மும்பை:
தமிழில் மௌனகுருவாக வந்து நல்ல விமர்சனங்களை பெற்ற படம் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இந்தியில் "அகிரா"வாக மாறியுள்ளது. இந்த படம் செப்டம்பர் 2-ம் தேதி வெளியாகும் என்று நடிகை சோனாக்ஷி சின்ஹா தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுங்களா? ''ஏ.ஆர்.முருகதாஸ் என்னை முழுமையாக மாற்றியுள்ள படம் 'அகிரா'. இதை பார்க்க நீங்களும், நானும் இனிமேலும் காத்திருக்க வேண்டியதில்லை. படத்தை செப்டம்பர் 2-ல் வெளியிட உள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.


சில பல பயிற்சிகளுக்கு பின்னர் சோனாக்ஷி ஆக்சனில் அதகளம் செய்துள்ளாராம். அந்த காட்சிகள் அனைத்தும் ரசிகர்களைக் கவரும் வகையில் படமாக்கப்பட்டு உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


இந்த படத்தில், சோனாக்ஷியின் தந்தை சத்ருகன் சின்ஹாவும் இடம்பெற்றிருக்கிறார். 


Find Out More:

Related Articles: