பூமியிலும் கபாலி... வானத்திலும் கபாலி... கபாலிடா... கபாலிடா

Sekar Chandra
சென்னை:
தரையிலும் கபாலி, வானத்திலும் கபாலி... இனி பூமியும் வானமும் கபாலி... கபாலிதான்டா... இது பாட்டு இல்லீங்க... விஷயத்தை பாருங்க...


பூமியின் சூப்பர் ஸ்டார் ரஜினிக்குதான் இந்த பெருமை கிடைத்துள்ளது. எப்படி? ஏர்-ஏசியா நிறுவனம் 'கபாலி' படத்தின் பிரமோஷனின் தானும் பங்கெடுத்துள்ளது. தங்கள் நிறுவன விமானங்களின் வெளிப்புறத்தில் அசத்தலான 'கபாலி' பட போஸ்டர்களை ஒட்டியுள்ளது. இந்த விமானங்கள் உலகம் முழுவதும் பறக்கின்றன.


பெங்களூர் உட்பட பல்வேறு நகரங்களிலும் "கபாலி" விமானங்கள் பறக்க தயாராகிவிட்டன. ஏற்கனவே கபாலி பிரியாணி ஸ்பெஷல் ஆனது போல் இப்போது வானத்திலும் கபாலிக்கு விளம்பரமோ... விளம்பரம். அதுமட்டுமா! கபாலி படத்தில் ரஜினி கூறும் மகிழ்ச்சி வாசகமும் இடம் பெற்றுள்ளது. 


கபாலி படம் ஒட்டிய இந்த விமானம் தான் தற்போது இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் படமாக உள்ளது. உலக அளவில் எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமை கபாலி படத்தால் தமிழக மக்களுக்கு கிடைத்துள்ளது. மகிழ்ச்சி... பெரும் மகிழ்ச்சி....
ரஜினியைப் பற்றி ஏதாவது ஒரு கருத்து சொல்லி தன்னை சுற்றி பரபரப்பு இருக்க வேண்டும் என்று நினைக்கும் இயக்குனர் ராம் கோபால் வர்மாவும், “இது உயரமல்ல, ஆனால், இதுதான் நட்சத்திர அந்தஸ்து. ரஜினி குண்டு அல்ல, அவர் ஒரு அணுகுண்டு” என்று டுவிட்டரில் பதிவிட்டு இருக்கிறார். சூப்பர் ஸ்டார் பார்க்காத உயரமா?


Find Out More:

Related Articles: