சென்னை:
அது என் காதலி... இது என் மனைவி... என சூப்பர் ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார் இவர். யார் தெரியுங்களா?
வேறு யாரு... டார்லிங்ன்னு ஆரம்பிச்சு... எனக்கு இன்னொரு பேரு இருக்குன்னு முறுக்கிக்கிட்டு நிற்கிற ஜி.வி. பிரகாஷ்தான். இசை இவருக்கு காதலியாம்... நடிப்பு மனைவியாம்... எப்படி இருக்கு கதை? ஆனா இப்ப இவரு கையில் 9 படங்கள் நடிக்கிறதுக்காக இருக்குங்க. இதுக்கு இடையில இவர் ஆரம்பிச்ச தயாரிப்பு நிறுவனம் பற்றி கேட்டால்... எங்கங்க நடிக்கறதுக்கே நேரம் போதலை. இருந்தாலும் அடுத்த ஆண்டில் இருந்து என் தயாரிப்பில் படங்கள் வரும்னு சொல்றார்.
நீங்களும் 9 படங்களை கையில வைச்சிருக்கீங்க... விஜய் சேதுபதியும் 9 படங்கள் வைச்சிருக்கார். அப்ப உங்க 2 பேருக்கும் போட்டியான்னு ஒரு நல்ல மனுசன் பத்த வைக்கிறாருங்க... ஏம்பா... நல்லாதானே போய்க்கிட்டு இருக்கு...