சென்னை:
ஆரம்பம் என்னவோ நல்லாதான் இருந்துச்சு... ஆனால் போக... போக... ஒன்றுமே இல்லியே... அங்க தாவிடுவோமா? தத்தளிக்கும் நடிகை.
விஷயத்து வருவோம். இவன் வேற மாதிரி படத்தோட ஹீரோயின் "சுரபி" தான் இப்ப ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைப்பதா... இல்ல 2 காலையும் ஒரே இடத்தில் வைப்பதான்னு குழம்பி போய் இருக்கார். காரணம் முதல் படம் போட்டு தந்த வெற்றிப்பாதை 2ம் படத்துல கிடைக்கலை. துக்கடா வேஷம்தான்.
அப்புறம் சரியாக படங்கள் அமையல. தெலுங்குக்கு டைவ் அடித்தார். அங்கும் 2 படங்கள்... ஆனால் அதுவும் கதைக்கு ஆகலை. இப்ப வர்றது எல்லாமே சின்ன வேடங்கள். அதனாலதான் சினிமாவுக்கு அவசரப்பட்டு வந்துட்டோமோன்னு நிலைகுலைந்து போய் இருக்காராம்.
இப்ப என்ன செய்வது என்று புரியாமல் விழித்து வரும் அவர் சின்னத்திரை சீரியலுக்கு டைவ் அடித்து விடலாமான்னு யோசிக்கிறாராம்.