சென்னை:
டூப்பே டூப்பம்மா... எங்க இரண்டு பேரில் யாரு ரொம்ப அழகும்மா... என்று கேட்கிற அளவுக்கு செம தில்லா இருக்கு உலகத்தின் வாரிசு.
ரிஸ்க்கான காட்சிகளில் நட்சத்திரங்களுக்கு பதிலா அவங்க சாயலை அவங்களை ஒத்து இருக்கிறவங்களை நடிக்க க்ஷ
வைப்பாங்க... இவங்கதான் டூப் நடிகர்கள். ஆனால் இது வெளியில தெரிஞ்சா இமேஜ் போயிடும்னு அந்த டூப் நடிகர்களை தங்கள் பக்கத்தில் கூட நிற்க வைக்க மாட்டாங்க நடிகர், நடிகைகள்.
இதில் மாறுப்பட்டு இருக்காங்க உலகத்தின் வாரிசு நடிகை. இவரு தன் அப்பாவோட சேர்ந்து நடிக்கிற படத்தோட ஷீட்டிங்கிற்காக லாஸ் ஏஞ்சல்சில் இருக்கார். ஒரு சண்டை காட்சியில வாரிசுக்கு பதிலா அவரை போலவே இருக்கிற டூப் நடிகை நடிக்கிறார். இங்கதான் உலகத்தின் வாரிசு தன்னை வித்தியாசப்படுத்திக்கிட்டு இருக்காங்க.
டூப் நடிகையோட லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை உலா வந்து ரவுண்ட் அடித்துள்ளார் உலகத்தில் வாரிசு. அதுமட்டுமா... அந்த டூப்புடன் செல்பியும் எடுத்து அதை தன் இணைய தள பக்கத்திலும் ஷேர் செய்திருக்கிறார். உண்மையிலேயே வித்தியாசமான வாரிசுதானே.