விதைக்கறதுக்கு முன்னாடியே சுதாரித்த புன்னகை நடிகை

Sekar Chandra
சென்னை:
விதைக்கிறதுக்கு முன்னாடியே அறுவடை செய்ய நினைப்பது நம்ம கோலிவுட் ஆளுங்க கணக்கு. ஆனால் விதைக்கவே வேண்டாம்னு முடிவு செஞ்சதுதான் இந்த விஷயம்.


புன்னகை நடிகையின் கணவருக்கு இப்போ சொல்லிக் கொள்வது போல எந்தப்படமும் இல்ல. பீல்டில் அவர் இருக்கிறாரா? இல்லையான்னு கூட தெரியாத நிலைதான் இருக்கிறது. இதனால் கணவருக்கு கைத்தூக்கி விட புன்னகை நடிகை முடிவு செய்ய... புதிய படம் தயாரிக்கலாம் என்று நினைத்துள்ளார்.


இங்குதான் ஆரம்பம் ஆனது அட்வைஸ் மழை. வேண்டாம் ராப்பகலா வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தை இழந்து விடாதேன்னு நலம் விரும்பிகள் புன்னகை நடிகையின் காதில் கிசுகிசுத்துள்ளனர். அதுமட்டுமா... இப்படி படம் எடுத்து ஓட்டாண்டி ஆனவர்கள் பற்றியும் சொல்ல மிரண்டு போன அவர் படம் எண்ணத்தையே கடாசி பரணில் ஏற்றி விட்டாராம். நல்ல யோசனைதான்... இப்போ காதல் கணவர் அப்செட்டில் இருந்தாலும் பட வாய்ப்புகளை தேட ஆரம்பிச்சுட்டாராம்.


Find Out More:

Related Articles: