
இணையத்தில் வைரலான சிறுவன் டி.இமான் இசையில்!
கிருஷ்ணகிரியை சேர்ந்த பார்வையற்ற சிறுவன் ஒருவனின் பாடும் திறமை இன்று உலகம் முழுவதும் போய் சேர்ந்து, இசையமைப்பாளர் டி. இமானின் இசையில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த திருமூர்த்தி என்ற சிறுவன் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலை பாடிய வீடியோ வைரலானது. வீடியோவை டி.இமான் அவர்களுக்கும் இணைய பயனாளிகள் அனுப்ப, வீடியோவை பார்த்த இசையமைப்பாளர் டி இமான் அந்த சிறுவன் யார் என்ற தகவலை தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இணைய வாசிகள் உடனடியாக சிறுவனின் விபரங்களை டி இமான் அவர்களுக்கு அனுப்பி வைத்தனர்.டி.இமான், விவரம் கிடைத்ததாகவும் விரைவிலேயே சிறுவனை தான் இசையமைக்கும் படத்தில் பாட வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
![Image result for blind man in media sings for D. Imman's next]](https://s3.ap-southeast-1.amazonaws.com/images.deccanchronicle.com/dc-Cover-ha20t95tsm4l0p03o6tmumgtv7-20190923015017.Medi.jpeg)
கிருஷ்ணகிரியை சேர்ந்த பார்வையற்ற சிறுவன் ஒருவனின் பாடும் திறமை இன்று உலகம் முழுவதும் போய் சேர்ந்து, இசையமைப்பாளர் டி. இமானின் இசையில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த திருமூர்த்தி என்ற சிறுவன் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலை பாடிய வீடியோ வைரலானது.
வீடியோவை டி.இமான் அவர்களுக்கும் இணைய பயனாளிகள் அனுப்ப, வீடியோவை பார்த்த இசையமைப்பாளர் டி இமான் அந்த சிறுவன் யார் என்ற தகவலை தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இணைய வாசிகள் உடனடியாக சிறுவனின் விபரங்களை டி இமான் அவர்களுக்கு அனுப்பி வைத்தனர்.டி.இமான், விவரம் கிடைத்ததாகவும் விரைவிலேயே சிறுவனை தான் இசையமைக்கும் படத்தில் பாட வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.