எல்லையில் இனிப்பு கொடுத்து "பாசக்கரம்" நீட்டிய ராணுவத்தினர்

Sekar Tamil
ஜம்மு காஷ்மீர்:


இந்த ஒற்றுமை ஒருநாள் மட்டும் இல்லாமல் தொடர்ந்து நீடித்தால் தீவிரவாதம் என்பது காணாமல் போய் விடும். அந்தளவிற்கு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.


இந்தியா, பாகிஸ்தானிலும் தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகே, பூஞ்ச் - ரவாலாகோட், டாடாபானி- மெந்தர் பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களும் இனிப்பை பரிமாறிக் கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தது.


காஷ்மீரில் கலவரம் நடந்து வரும் இந்த நேரத்தில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் நடந்த இந்த நிகழ்வு இரு நாட்டு மக்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.


பலரும் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்த மகிழச்சி தொடர்ந்து நீடித்தால் தீவிரவாதத்திற்கு ஒரு முடிவு ஏற்பட்டு விடும்.



Find Out More:

Related Articles: