வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் நாளை முதல் மூடல்

Sekar Chandra
காஞ்சிபுரம்:
நாளையுடன் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காரணம்... சீசன் முடிவடைந்ததால் மூடப்படுகிறதாம்.


 
இந்திய அளவில் புகழ் பெற்ற பறவைகள் சரணாலயம் காஞ்சிபுரம் மாவட்டம் வேடந்தாங்கலில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் சீசன் தொடங்குகிறது. பல நாடுகளை சேர்ந்த அரிய, அழகிய பறவைகள் ஆண்டுதோறும் இங்கு வருவது வழக்கம். 


கலர்புல் பறவைகள், அவற்றின் இனிமையான சத்தம் குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை இங்கு இழுத்து வந்து விடும். வழக்கம் போல் இந்தாண்டும் சீசன் ஆரம்பித்த நாளில் இருந்து இங்கு வந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். 


இந்நிலையில் சீசன் முடிவடைந்தால் பறவைகள் வரத்தும் மிகவும் குறைந்துவிட்டது. இதனால் வேடந்தாங்கல் சரணாலயத்தை மூட வனத்துறையினர் முடிவெடுத்தனர். இதையடுத்து நாளை முதல் சரணாலயம் மூடப்படுவதாக அறிவித்துள்ளனர். 


Find Out More:

Related Articles: