குடல்களில் சேரும் ஒட்டுன்னிகள் தான் புழுக்களாக மாறுகிறது. இது உடம்பில் தேங்குவதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் ஆகிறது.
வயிற்றில் தேங்கியிருக்கும் புழுக்களை அகற்றும் உணவுகள் என்னென்ன என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.
கேரட்
தினமும் காலையில் வெறும் வயிற்றில், கேரட் ஜூஸ் குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி விடும்.
பப்பாளி விதைகள்
பப்பாளி விதைகளை காய வைத்து, பொடி செய்து, தினமும் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், குடல் புழுக்கள் நீங்குவதோடு, வயிறும் சுத்தமடையும்.
புதினா எலுமிச்சை சாறு
புதினாவை சாறு எடுத்து, அதனுடன் எலுமிச்சை கலந்து குடித்து வந்தால், புழுக்கள் வெளியேறும்.
கிராம்பு
கிராம்பு, வயிற்று புழுக்களை அகற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் ஒன்று அல்லது இரண்டு கிராம்புகளை வாயில் மென்று சாப்பிட்டு வந்தால், புழுக்கள் வருவது தடுக்கப்படும்.