கோழியா... தெறிக்கும் மலேரியா கொசுக்கள்... ஆய்வில் தகவல்

Sekar Tamil
அமெரிக்கா:
கோழி... கோழி... அதுதான் மலேரியா கொசுக்களுக்கு எதிரி என்று ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளதாம். விஷயம் என்ன தெரியுங்களா?


மலேரியாவை சுமந்துவரும் கொசுக்கள் சில விலங்குகளின் வாசனையால் அதிலும் குறிப்பாக கோழிகளின் வாசனையால் தடுக்கப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதனால் மலேரியா கொசுக்களை அழிக்க கோழி சரியான வழி என்று தெரிய வந்துள்ளது.


அனோபிலிஸ் அராபியென்சிஸ் கொசு, விலங்குகளின் ரத்தத்தை காட்டிலும் மனித ரத்தத்தையே பெரிதும் விரும்கிறது என்று  எத்தியோப்பியாவில் பணி செய்துவரும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால் ஆடு மற்றும் வெள்ளாடுகளிலிருந்து ரத்தத்தை இந்த கொசுக்கள் அவ்வப்போது உறிஞ்சுகிறது.


ஆனால் கோழிகள் பக்கம் மட்டும் கொசுக்கள் தலை வைத்துக்கூட படுப்பதில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மலேரியா நோய் மிக அதிகமாக தொற்றிப் பரவியுள்ள பகுதிகளிலும், பூச்சிக் கொல்லிகளுக்கு எதிராக கொசுக்களின் எதிர்ப்பு திறன் வளர்ந்து வரும் பகுதிகளிலும் பயனுள்ளதாக இருக்கும் என்று இந்த ஸ்வீடிஷ் - எத்தியோப்பிய குழு தெரிவித்துள்ளது.


அப்போ... கோழிகள் என்றால் மலேரியா கொசுக்களுக்கும் காய்ச்சல் அடிக்கும் போல.


Find Out More:

Related Articles: