தோல் அரிப்பை போக்கும் அரச இலை

Sekar Chandra
கோடைகாலத்தில் ஏற்படும் வியர்வை காரணமாக, உடலில் வியர்வை தங்கும் இடங்களில் அலர்ஜி, வேர்க்குரு, பரு, தடிமன், அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. எனவே இவற்றை தகுந்த முறைகளை கொண்டு கையாளாவிட்டால் நாளைடைவில் தோல் நோயாக மாறும் வாய்ப்பு உள்ளது. வெயில் காலங்களில் பூஞ்சை காளான்களால் தோலின் மேற்புறத்தில் ஏற்படும் தொற்றுகளை தடுப்பதற்கான மேற்பூச்சு மருந்து ஒன்றை அரச இலையை பயன்படுத்தி தயாரிக்கும் முறையை பார்க்கலாம்.


இதற்கு தேவையான பொருட்கள் அரச மரத்தின் துளிர் இலைகளை எடுத்து லேசாக கசக்கி அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். இதை ஒரு பாத்திரத்தில் எடுத்து நீர் விட்டு கொதிக்க விட வேண்டும். பின்னர் இதை எடுத்து அரிப்பு, வேர்க்குரு போன்ற இடங்களில் தடவி வைத்திருந்து சிறிது நேரத்திற்கு பிறகு குளிக்க வேண்டும். 


இவ்வாறு செய்து வருவதன் மூலம் அரிப்பு, வேர்க்குரு, அலர்ஜி போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம். இதனால் தோல் நல்ல மென்மையும், வலிமையும் ஏற்படும். அரச இலை பூஞ்சை காளான்களை போக்கும் தன்மை உடையது.


Find Out More:

Related Articles: