கோவா:
இன்றைக்கு யோகா தினம்... நாடு முழுவதும் யோகா பற்றிய டீச்சிங்தான். அப்படிதான் மத்திய அமைச்சரும் ஒரு யோசனை சொல்லியிருக்கார். இது ஆய்வு டீடெய்ல்ஸ் வைச்சு சொன்னதாம்.
கோவாவில் தேசிய மருத்துவக் கண்காட்சி ஸ்டார்ட் ஆனது. இதில் மத்திய ஆயுஷ் மருத்துவத் துறை அமைச்சர் பநீபத் நாயக் கலந்துகொண்டு பேசினார். அவர் என்ன சொன்னார் தெரியுங்களா?
ஆயுர்வேதம், யோகா... அட இருங்கப்பா... நேச்சுரோபதி, யுனானி, சித்தா எல்லாத்தையும் உள்ளடக்கியதுதான் ஆயுஷ் மருத்துவம். இதை மாற்று மருத்துவ சிகிச்சையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆயுஷ் மருத்துவம் என்பது அலோபதிக்கு எதிரி இல்லைங்க... என்று கூறியவர்... அடுத்து கூறியதுதான் முக்கியமான ஹைலைட்.
புற்று நோயை யோகா வாயிலாக குணப்படுத்தலாம்னு பெங்களூரில் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார். அவர் கூறியது உண்மைதான். யோகா வாயிலாக பல நோய்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்பது உண்மையிலும் உண்மை. யோகா செய்ய முயற்சிப்போம்.. உடல் நலத்தை காப்போம்.