சென்னை:
கிடைச்சாச்சு... கிடைச்சாச்சு... ஒரே நாளில் 45 ஆயிரம் வாடிக்கையாளர்கள் கிடைச்சாச்சு என்று குதூகலமாக உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். எதற்காக தெரியுங்களா?
தொலைத் தொடர்பு துறையில் சற்று அசந்தா அவ்வளவுதான் பின்னுக்கு சென்று விடும் அளவிற்கு அதிகரித்து வருகிறது போட்டி. இதனால் வாடிக்கையாளர்களை கவர, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், தமிழகம் முழுவதும், 'மெகா மேளா'வை நடத்திச்சு பாருங்க. இதில் எதிர்பார்த்தது ஒன்று நடந்தது ஒன்று என்பது போல்...
புதிய, தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்கள் கிடைக்காவிட்டாலும் அதிக அளவு மொபைல் போன் வாடிக்கையாளர்களை அள்ளி விட்டது பிஎஸ்என்எல் நிறுவனம்.
இதுகுறித்து அதிகாரிகள் உற்சாகமாக கூறுகையில், வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில், சென்னை வட்டம் தவிர்த்த, இதர மாவட்டங்களில், செப்., 15ல், 'மெகா மேளா' நடத்தினோம். உடனே இணைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது.
அதனால், ஒரே நாளில், 45 ஆயிரம், மொபைல் போன், 'சிம் கார்டுகள்' விற்பனையானது. 2,600, 'இன்டர்நெட், பிராட் பேண்ட்' மற்றும் தொலைபேசி வாடிக்கையாளர்களும், புதிதாக கிடைத்தனர் என்று தெரிவித்துள்ளனர்.