மும்பை:
ரிலையன்ஸ் ஜியோவின் சேவை வரும் 5-ம் தேதி முதல் தொடங்கிறது. அதன் கட்டணமில்லா புதிய சலுகைகளையும் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். இதுதான் இப்போது செல்போன் நிறுவனங்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ சேவை தொடக்க தேதியையும், அதன் கட்டண சலுகையையும் அதிகாரப்பூர்வமாக ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மும்பையில் அறிவித்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ கடந்த மாதம் சோதனை முயற்சியில் அளவில்லா டேட்டா சேவை வழங்கியது. அதில் அனைவரையும் ரிலையன்ஸ் ஜியோ ஈர்த்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு இன்டர்நெட் சேவை அபரிமிதமாக இருந்தது.
இப்போது மேலும் பல சலுகைகளுடன் தற்போது ரிலையன்ஸ் ஜியோவில் அறிமுகப்படுத்தியுள்ளனர். புதிதாக ஜியோ ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
5ம் தேதி முதல் 31 டிசம்பர் 2017 வரை ஆப் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. ஜியோ ஆப்-இன் ரூ.1250 மதிப்புள்ள ஒரு வருட சந்தா கட்டணம் இலவசமாக கொடுக்கிறாங்க.
ஆப் அழைப்பு வசதி, இந்தியா முழுவதும் இலவச ரோமிங் வசதி மற்றும் 1GB டேட்டா ரூ.50க்கு வழங்கப்படுகிறது. ரிலையன்சின் இந்த டேரிப் பிளானும் வெளியிடப்பட்டுள்ளதால் மற்ற செல்போன் நிறுவனங்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.