2ம் தேதி பாங்க் ஊழியர்கள் ஸ்டிரைக்...ஸ்டிரைக்...

frame 2ம் தேதி பாங்க் ஊழியர்கள் ஸ்டிரைக்...ஸ்டிரைக்...

Sekar Tamil
சென்னை:
வரும் 2ம் தேதி பாங்க் இருக்காது... இருக்காது... காரணம் அன்று பாங்க் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.


கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வரும் 2ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது.


வங்கிகளை தனியார்மயமாக்கக் கூடாது, பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளை மூடக்கூடாது என்பன போன்ற பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (ஏ.ஐ.பி.இ.ஏ.,) சார்பில் வரும் செப்., 2ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கிறது.


இத்தகவலை அச்சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். எனவே 2ம் தேதி நகரம், கிராமம் என பாங்க் செயல்படாது.


Find Out More:

Related Articles:

Unable to Load More