புத்துணர்ச்சியை தரும் மூலிகை குளியல்

Sekar Tamil
உடலில் இருக்கும் நச்சுக்களை மூலிகை குளியல் மூலம் நாம் விரட்டி விடலாம். இது மேனியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து, சருமத்தை பளபளப்பாக்குகிறது. மூலிகை குளியல், நம் உடம்பில் இருக்கும் மாசுக்களை அகற்றி விடுவதோடு, அசதி மற்றும் உடல் வலியை நீக்கவும் செய்கிறது.


இப்போது மூலிகை குளியல் செய்யும் முறையை நாம் பார்க்கலாம். 


தேவையான பொருட்கள் :
பாதாம் எண்ணெய் - 50 மி.லி. 
ஆலிவ் எண்ணெய் - 50 மி.லி. 
சந்தன எண்ணெய் - 4 துளிகள் 
ரோஜா எண்ணெய் - 4 துளிகள்.


இவை அனைத்தையும் ஒன்றாக, கலந்து, ஒரே பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும். 


ஒன்றாக கலந்த இந்த எண்ணெய்யை, உடம்பில் வலி இருக்கும் பகுதிகளில் தேய்த்து, மசாஜ் செய்து கொள்ள வேண்டும். பிறகு இளஞ்சூட்டுள்ள நீரில் ஒரு துண்டினை நனைத்து உடல் முழுவதும் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.


இதையடுத்து ஸ்க்ரப் செய்யும் முறையை நாம் இப்போது பார்க்கலாம். 


வெள்ளை சர்க்கரை - 1 கப் அரிசி 
தவிட்டு எண்ணெய் - 50 மி.லி. 
ரோஜா இதழ்கள் - ஒரு கைப்பிடி 
மல்லிகை எண்ணெய் - 3 துளிகள் 
சந்தன எண்ணெய் - 3 துளிகள்.


இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்து கொள்ளுங்கள். 


ஏற்கனவே செய்த எண்ணெய் மசாஜிற்கு பிறகு, உடல் முழுவதும் தயாரித்து வைத்த இந்த ஸ்க்ரப்பய் தேய்த்து கொள்ளுங்கள். வட்ட வடிவமாக கீழிருந்து மேலாக தேய்க்க வேண்டும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அழுக்குகள் நச்சுக்கள் வெளியேறி சருமம் மென்மையாக மாறிவிடும்.


20 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், உடல் புத்துணர்ச்சி பெறுவதோடு, அழகும் இரட்டிப்பாகும். 


Find Out More:

Related Articles: